Thursday, January 8, 2026 12:21 pm
இந்தியா ,பங்கலாதேஷ் ஆகிய நாஅடுகளுக்கிடையே இடையே நிலவி வரும் தூதரக ரீதியான பதற்றம் தற்போது விஸா இரத்து வரை சென்றுள்ளது.
பங்களாதேஷில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவமும், அதற்கு எதிராக இந்தியாவில் வெடித்த போராட்டங்களும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. விளையாட்டு துறையிலும் இந்த பாதிப்பு எதிரொலித்துள்ளது; ஐபிஎல் தொடரில் வீரர்கள் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, இந்தியாவில் இனி விளையாட போவதில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
இந்த சூழலில், பாதுகாப்பு காரணங்களை கூறி இந்தியர்களுக்கான விஸா சேவைகளை பங்களாதேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டெல்லி , சென்னை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பங்களாதேஷ் தூதரகங்களிலும் சுற்றுலா விஸாக்கள் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வணிகம் ,வேலைவாய்ப்பு தொடர்பான விஸாக்கள் மட்டும் விதிவிலக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இந்த பகைமை போக்கு, தெற்காசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

