அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை முன்மொழிந்த, வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட $21 மில்லியன் மானியத்தைக் குறைத்தார்.
மியாமியில் நடந்த சவுதி அரேபியா அரசாங்க ஆதரவுடன் கூடிய FII முன்னுரிமை உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப்,
“இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கைக்கு நாம் ஏன் 21 மில்லியன் டொலரைச் செலவிட வேண்டும்? அவர்கள் (பிடன் நிர்வாகம்) வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்கள் என்று நினைக்கிறேன் ” என்றார்.