Thursday, February 6, 2025 5:58 pm
இத்தாலியில் வட்ஸ்அப் பயனர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெட்டா பிளாட்ஃபார்ம்களின் துணை நிறுவனமான வட்ஸ்அப் செய்தியிடல் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தாலியில் குறைந்தது ஏழு மொபைல் சந்தாதாரர்கள் ஸ்பைவேர் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்த விவகாரத்தை விசாரிக்க தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்திடம் பணித்துள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஏழு பேரில் குறைந்தது இரண்டு பேர் – ஒரு பத்திரிகையாளர் , ஒரு மனிதாபிமானக் குழுவின் நிறுவனர் உட்பட – நிலைமை குறித்து பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களும் குறிவைக்கப்பட்டதாக மெலோனியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.