இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி குஜராத் நிலம் அகமதாபாத்தில் நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 50 ஓவர்களில் சகல விக்கெர்களையும் இழந்து 356 ஓட்டங்களை எடுத்தது. 357 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து 34.2 ஓவர்களில் 214 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ரோஹித் சர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 52 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.
ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை அடித்து 112 (102) ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் 78 (64) ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 40, பாண்டியா 17, அக்சர் பட்டேல் 13, சுந்தர் 14, ராணா 13 ஓட்டங்கள் எடுக்க 50 ஓவர்களில் சகல விக்கெற்களியும் இழந்த இந்தியா 356 ஓட்டங்கள் எடுத்தது. அடில் ரசித் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
357 ஓட்டங்களைத் துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் பில் சால்ட் 23, பென் டக்கெட் 34 டாம் பாண்டன் 38, ஜோ ரூட் 24 மிடில் ஆர்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரி ப்ரூக் 19, கப்டன் பட்லர் 6, லிவிங்ஸ்டன் 9 ஒட்டக்களில் ஆட்டமிழந்தனர்.
34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் இந்த போட்டியில் அர்ஷ்தீப்சிங், ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் ,குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் சுப்மன் கில் தெர்வு செய்யப்பட்டார்.
