Sunday, February 22, 2026 10:32 am
பாகிஸ்தான் விமானம் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியானார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நடந்த கொடிய தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட, சமீபத்திய தாக்குதல்களுக்குப் பின்னால் ஆயுதமேந்திய குழுக்களைச் சேர்ந்த “முகாம்கள் மற்றும் மறைவிடங்கள்” என்று அழைக்கப்படுவதை குறிவைத்தது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்தது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், நங்கர்ஹார் மற்றும் பாக்டிகாவின் எல்லை மாகாணங்களில் “ஒரு மதப் பள்ளி , குடியிருப்பு வீடுகள் என்பன தாக்கப்பட்ட்டதாகவும், நங்கர்ஹாரில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் டஜன் கணக்கான வீரர்கள், பொதுமக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய போராளிகளைக் கொன்ற கொடிய எல்லை மோதல்களைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையிலான பலவீனமான போர்நிறுத்தத்தை இந்த தாக்குதல்கள் அச்சுறுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமைப்பினர் பாகிஸ்தானுக்குள் குண்டுவெடிப்பு சம்பவம், தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தான் இரவோடு இரவாக பாகிஸ்தான், திடீரென்று ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதன்படி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான நங்கர்ஹார் மற்றுமு் பக்திகா மாகாணங்களில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் தனதுபோர் விமானங்கள் மூலமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

