Tuesday, March 31, 2026 9:21 am
தவெகவின் ஆதவ் அர்ஜுனவின் குடும்பத்தில் இருந்து மூன்று பேர் மூன்று கட்சிகளின் வேட்பாளர்களாஅக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார்.
ஆதவ் அர்ஜுனாவின் மாமியார், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். முன்பு, ஐஜேகே கட்சியில் செயல்பட்டு வந்த லீமா ரோஸ், அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது லால்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி இருந்தார். அவர் தற்போது வேட்பாளராக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் களமிறங்குகிறார். பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லாட்டரி மார்ட்டின், முன்னணி கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

