பங்களாதேஷ், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் வரி செலுத்துவோரின் பணத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, மில்லியன் கணக்கான டொலர் செலவாகும் என்று முன்மொழியப்பட்ட தொடர்புடைய திட்டங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.
ஆசியாவில் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான 47 மில்லியன் டோலர் திட்டம், பங்களாதேஷில் புவிசார் அரசியல் நிலப்பரப்பை வலுப்படுத்துவதற்கான 29 மில்லியன் டொலர் திட்டம் மற்றும் இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவை ஊக்குவிப்பதற்கான 21 மில்லியன் டொலர் திட்டம் உட்பட பல நாடுகளுக்கான சுமார் 15 திட்டங்கள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு