மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இத்தாலியின் ஜானிக் சின்னர் சம்பியனானார்.
இரண்டு மணி நேரம் 42 நிமிடங்கள் நடந்த போட்டியில் சின்னர் 6-3, 7-6 (4), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இத்தாலிய வீரர் ஆண்ட்ரே அகாசி, ரோஜர் ஃபெடரர் , நோவக் ஜோகோவிச் ஆகியோரைப் போன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.
கடந்த ஐந்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது பட்டத்தை வென்றுள்ளார் சின்னர்.