Sunday, January 18, 2026 10:15 pm
பல கோரிக்கைகளை முன்வைத்து 24 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு தொடங்கி 24 மணி நேரம் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் செய்ய அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது என்று சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் துணை இயக்குநரின் நடத்தை குறித்து சுகாதார அமைச்சு பாரபட்சமற்ற விசாரணை நடத்தத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக தர்மவிக்ரம கூறினார்.
வேலைநிறுத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்புகள் இரண்டு சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும், எனவே தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர சங்கம் முடிவு செய்ததாகவும் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறினார்.

