அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம், தமண, உகன, நாமல் ஓயா, மஹா ஓயா, பதியத்தலாவ, காரைதீவு, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு, லகுகல, நாவிதன்வெளி, தெஹியத்தகண்டி ஆகிய 19 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழ் அரசுக் கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன.
இம்முறை அதிகமான சுயேச்சைக்குழுக்கள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளன. இதில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள நாபீர் பவுண்டேஷன் சுயேட்சைக் குழு சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையினால் கைப்பற்றுவதற்கான மக்களின் பெரும் ஆதரவு பாரியளவு இருப்பதை அவதானிக்க முடிகிறமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய 4 தேர்தல் தொகுதிகளிலும் 19 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை