அம்பாந்தோட்டை பறவை பூங்காவின் பறவை உணவு சேமிப்புப் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும், நான்கு கஞ்சா செடிகளையும், பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்தப் பூங்காவின் பண்ணை முகாமையாளர், கிடங்கு முகாமையாளர் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். இவை முறையான ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.