அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் உள்ள அறிவிப்பு கத்தோலிக்கப் பாடசாலையில் புதன்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வயது குழந்தையும் 10 வயது குழந்தையும் கொல்லப்பட்டனர்.17 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு முன்னதாக, துப்பாக்கி, , கைத்துப்பாக்கியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ப்படசாலையின் தேவாலயத்தை நெருங்கி, பிரார்த்தனையின் போது இருக்கைகளில் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது ஜன்னல்கள் வழியாக சுட்டதாக மினியாபொலிஸ் தலைவர் பிரையன் ஓ’ஹாரா ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பின்னர் தேவாலயத்தின் பின்புறத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக ஓ’ஹாரா உறுதிப்படுத்தினார். சந்தேக நபர் 20 வயதுடையவர் என்றும் அவருக்கு விரிவான குற்றவியல் வரலாறு இல்லை என்றும் அவர் கூறினார். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிட்மாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஐந்தாவது பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 286 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. துப்பாக்கிச் சூடு என்பது குற்றவாளியைத் தவிர்த்து நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்படும் அல்லது கொல்லப்படும் சம்பவமாகும்.