இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது “X” கணக்கில் அவர் வெளியிட்ட குறிப்பில்,
சமீபத்திய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இலங்கை ரொக்கமாகவும் அசலாகவும் பெற்றுள்ளது
உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்த USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க அதன் நிதியைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது குறித்த தெளிவான பதிவுகள் எதுவும் இல்லை என்றும், USAID இன் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் எம்.பி. அந்தக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Trending
- வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் கைது
- கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
- புது வருட விபத்தில் 80 பேர் பாதிப்பு
- சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பொலிஸில் புகார்
- போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது சீன அரசு உத்தரவு
- உலகில் முதல்முறையாக விந்தணு ஓட்டப் பந்தயம்
- சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்