கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் வடகொரியா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடகொரியா – தென்கொரியா நாடுகள் இடையே கொரியா பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரச்சினை இருந்து வருகிறது. வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் அன், தென்கொரியாவை நெருக்கடி கொடுத்து வருகிரார். சில மாதங்களுக்கு முன்பாக பறக்கும் பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென்கொரியாவுக்குள் விட்டார்.
தென்கொரியாவும் வடகொரியாவை சமாளிப்பதற்காக அடிக்கடி அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு இராணுவ பயிற்சியை எடுத்து வருகிறது. அவர்களை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது.
இந்நிலையில்தான் சமீபத்தில் அமெரிக்காவின் விமானங்கள் தாங்கிய போர்க்கப்பல் ஒன்று கொரிய தீபகற்ப பகுதியில் நுழைந்துள்ளது. இது வடகொரியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நேரடியாகவே அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள கிம் ஜாங் அன்னின் சகோதரி ஜிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.
பொதுவாக இதுபோல அமெரிக்காவுடன் முட்டும்போதெல்லாம் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் ஏவி மிரட்டிக் காட்டுவது வழக்கம் என்பதால் சில நாட்களில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!