Friday, February 6, 2026 7:57 am
டொனால்ட் ட்ரம்பின் பல மாத அச்சுறுத்தல்களுக்குப் பிறகு தனது அரசாங்கம் “அழுத்தம் இல்லாமல்” இருக்கும் வரை, அமெரிக்காவுடன் பேசத் தயாராக இருப்பதாக , கியூபாவின் ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல், கூறியுள்ளார்.
1959 புரட்சியின் போது துப்பாக்கி ஏந்திய பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை அளவிலான புகைப்படத்தின் முன் நின்று, 65 வயதான ஜனாதிபதி டியாஸ்-கேனல் வியாழக்கிழமை தனது நாடு “அவதூறு, வெறுப்பு,உளவியல் போரின் தீவிர ஊடக பிரச்சாரங்களுக்கு” ஆளாகியுள்ளதாகக் கூறினார்.
ஆயினும்கூட, “அமெரிக்காவுடன்னான பேச்சுவார்த்தைக்கு கியூபா தயாராக உள்ளது, எந்தவொரு அழுத்தம் அல்லது முன்நிபந்தனைகள் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த உரை தொலைக்காட்சி, வானொலி, யூடியூப் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது.

