Wednesday, January 14, 2026 7:34 am
ஈரானின் மீபத்திய அமைதியின்மைக்கு மத்தியில் “மிகவும் வலுவான விருப்பங்களை” அமெரிக்க இராணுவம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, தனது நாடு போருக்குத் தயாராக உள்ளது, ஆனால் பேச்சுவார்த்தைக்குத் திறந்திருக்கிறது என்றார் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி.
திங்களன்று அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், “வாஷிங்டன் முன்பு சோதித்த இராணுவ விருப்பத்தை சோதிக்க விரும்பினால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்.அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உடனான தொடர்புகள் “போராட்டங்களுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்தன, இன்னும் தொடர்கின்றன.” என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 28 முதல் பல ஈரானிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆரம்பத்தில், தேசிய நாணயமான ரியாலின் கடுமையான மதிப்புக் குறைப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக தெஹ்ரான் பஜார் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் மற்ற நகரங்களுக்கும் பரவியது. இந்த அமைதியின்மை பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் இருவரிடையேயும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.

