ஷாருக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தீபிகா படுகோன். அந்த படத்தின் இமாலய வெற்றியை அடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சக நடிகர் ரண்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் அவர் இணைந்து நடிக்கவிருந்த ‘தி இண்டர்ன்’ படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெளியான ஹொலிவூட் படமான ‘தி இண்டர்ன்’ படத்தை 2020 ஆம் ஆண்டு ரீமேக் செய்யும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ள தீபிகா படுகோன், படத்தில் தயாரிப்பாளராக மட்டும் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.