கதா ஜாதகக் கதைகள் காமிக் புத்தகங்களின் சிங்கள மொழிபெயர்ப்புகளின் 500 பிரதிகளை .கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கிரிபத்கொட கிரிபத்கொட ஸ்ரீ சுதர்சனராம புராண விகாரையின் சிறி பஞ்ஞானதிஸ்ஸ தர்ம வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு கொடுத்தது.
இந்தியாவின் மிகப்பெரிய காமிக் புத்தக வெளியீட்டாளரான ‘அமர் சித்ர கதா’வால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகங்கள், ஜாதகக் கதைகளின் காலத்தால் அழியாத ஞானத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய வடிவத்தில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. புத்தரின் ஒழுக்கப் பாடங்களையும் ஆன்மீக போதனைகளையும் இளம் மாணவர்களுக்கு விளக்கப்படக் கதைசொல்லல் மூலம் கொண்டு வருவதன் மூலம், இந்த முயற்சி குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களில் முக்கிய பௌத்த விழுமியங்களை விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.