அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மைக்கல் கொலினின் “அன்பின் முத்தங்கள்” கவிதை நூல்
அறிமுக விழா வெள்ளிக்கிழமை (22) கவிஞர் கனக தீபகாந்தன் தலைமையில்
திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருமண மண்டபம்த்தில் இடம்பெறவுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் க.மகேசன் முதன்மை விருந்தினராகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் சிறப்பு விருந்தினராகவும், கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்கள
மாகாண பணிப்பாளர் நா.மணிவண்ண் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். அழைப்பு விருந்தினராக ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருவும் ஆதீனகர்த்தாவுமான வேதாகமமாமணி சிவ ஸ்ரீ சோ.இரவிச்சந்திரகுருக்கள், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவம்,
ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.