அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு தற்போது செயல்படாமல் உள்ளது, இது குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் , சட்ட வல்லுநர்களிடையே கவலைகளை எழுப்புகிறது.
இந்த அமைப்பின் கீழ் 47 கமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், எதுவும் தற்போது செயல்படவில்லை, இது குற்றக் கண்டறிதல் மற்றும் சட்ட அமலாக்க முயற்சிகளை கணிசமாக பாதிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடமத்திய மாகாண சபை முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் 7 மில்லியன்ரூபா செலவில் அனுராதபுரம்,ஹபரண, பொலன்னருவ ஆகிய நகரங்களில் சிசிடிவி அமைப்புகளை நிறுவியது .