கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் அனுமதி இல்லாமல் மரக்குற்றிகளை சூட்சுமமாக வாகனத்தில் கடத்திச் சென்ற ஒருவரை நேற்று திங்கட்கிழமை [17]க் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் வாகனத்தையும் கைப்பற்றினர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணசிங்கவின் வழிகாட்டலில், போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி உதவிப்பொலிஸ் பரிசோதகர் நிலந்த , போக்குவரத்துப் பிரிவு உதவிப் பொறுப்பதிகாரி தம்பிராஜா தர்மரத்தினம் ஆகியோர் எழுதுமட்டுவாள் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டனர்.
சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேம்பு, நாவல் மரக் குற்றிகளையும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்
- சச்சின் டெண்டுல்கரை முந்தினார் ஜோ ரூட்
- விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்
- கொழும்புக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையே தினசரி விமான சேவை