அனலைதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை மேலும் வினைத் திறனாக முன்னெடுக்கும் நோக்கில் கட்சியின் பிரதேச அலுவலகம் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக செவ்வாய்க்கிழமை (8) திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தை திறந்துவைத்து உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விடையங்களை அனலைதீவு மக்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் அனலைதீவு மக்கள் ஏன் ஈபிடிபியை ஆதரிக்க வேண்டும் என்ற கூற்றையும் மக்கள் முன் தெளிவுபடுத்தினார்.