Sunday, March 29, 2026 3:05 pm
அதிமுகவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் விலகிய முன்னாள் எம்எல்ஏ நாராயணனுக்கு தவெகவில் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நாராயணன், அக்கட்சியில் இருந்து விலகினார். இரண்டு நாட்களில் நாட்களிலே அவர் நாங்குநேரி தொகுதிக்காக தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் திருப்பத்தூர் தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்து அதிமுகவில் இருந்து விலகிய திருப்பதி என்பவரும் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கும் திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. செய்யாறு தொகுதியில் வேட்பாளராகவும் அதிமுகவில் இருந்து விலகிய தூசி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்கள் ஏராளமானோருக்கு தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான சம்பவங்களுக்கு செங்கோட்டையன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. அதேபோல் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின், தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

