அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னுமி ரத்து செய்யப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் எரிசக்தி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டம் தொடர்பாக விசாரித்தனர். அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் விலை அதிகமாக இருந்ததால், இந்த விவகாரம் மறுபரிசீலனைக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். அந்த நேரத்தில், இந்திய அதானி தாய் நிறுவனம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதன்படி, முதலீட்டு வாரியம் இது குறித்து அமைச்சுக்குத் தெரிவித்திருந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். இருப்பினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கையில் உள்ள அதானியின் பிரதிநிதி நிறுவனத்துடன் நடத்தப்பட்டன. எனவே, இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க அந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரம் குறித்து பதில் எதிர்பார்க்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.