Saturday, January 10, 2026 3:57 pm
அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ், ஊவா மாகாணத்தில் வங்கி அட்டை அடிப்படையிலான பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பதுளையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் உள்ள பஸ் உரிமையாளர்கள், விரைவில் அனைத்து பஸ்களிலும் இந்த வசதியை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

