நடிகர் அஜித்குமாருக்கு இன்று திங்கட்கிழமை [28] மாலை டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் பத்மபூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தோடு டெல்லிக்கு புறப்பட்டு இருக்கிறார். ஏர்போட்டில் அவர் குடும்பத்தோடு செல்லும் போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது
இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்க இருக்கிறார்.