Thursday, March 20, 2025 9:07 am
முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்ததாலேயே அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனைத் தெரிவித்தார்.

