பிரேமதாச ஸ்டேடியத்தில் அவுஸ்திரேலியாவிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 49 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. 46 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த இலங்கை 214 ஓட்டங்கள் எடுத்தது. வெற்றி பெற 215 ஓட்ட எண்ணிக்கையுடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா 33.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணிக்காக ஆரம்ப வீரர்களாக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் இறங்கினர். அவுஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத இலங்கை வீரர்கள் 6.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 55 ஓட்டங்கள் எடுத்துத் தடுமாறியது. சரித் அசலன்க – துனித் வெல்லாலகே ஜோடி நிதானமாக விளையாடி ஓட்ட எண்ணைக்கையை உயர்த்தியது.
துனித் வெல்லாலகே 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தனி ஒருவனாகப் போராடிய சரித் அசலன்க எஷான் மலிங்கவுடன் இணைந்து ஒன்பதாம் விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன் சதம் அடித்து கலக்கினார்.126 பந்துகளுக்கு முகம் கொடுத்த சரித் அசலன்க, 5 சிக்ஸர்கள் 14 பெளண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருடைய மூன்றாவது ஒருநாள் சதமாகும்.
ஷோன் எப்போட் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஸ்பென்சர் ஜோன்சன், ஆரோன் ஹார்டி , நதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
215 ஓட்ட எண்ணிக்கையுடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.அவுஸ்திரேலிய வீரரான அலெக்ஸ் கெரி அதிக பட்சமாக 41 ஓட்டங்கள் அடித்தார்.
மகீஷ் தீக்ஸன 4 விக்கெட்டுக்களைவீழ்த்த , அசித பெர்னாண்டோ துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவு செய்யப்பட்டார்.
ஏகன் மீடியா, ஏகன், விளையாட்டு,கிறிக்கெற்,இலங்கை,அவுஸ்திரேலியா
