அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் ஒப்பந்தத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஏற்பாட்டாளர்களும் அஜர்பைஜான் அரசாங்கமும் சனிக்கிழமை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஃபார்முலா 1 பந்தயம் 2030 வரை பாகுவில் தொடரும்.
நகரின் பழைய நகரத்தின் வழியாக நீண்ட நேர்கோட்டுகளையும் இறுக்கமான மூலைகளையும் இணைத்து, “ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிகழ்வுகள் நிறைந்த மற்றும் பொழுதுபோக்கு பந்தயத்தை” வழங்குவதற்காக F1 தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனோ டொமெனிகலி இந்த பாதையை “தனித்துவமானது” என்று அழைத்தார்.
“இந்த புதுப்பித்தல் ஃபார்முலா 1, அஜர்பைஜான் அரசாங்கம் , விளம்பரதாரர் இடையேயான வலுவான நம்பிக்கை, அர்ப்பணிப்பை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது, மேலும் நாட்டில் ஒரு அற்புதமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
6 கிலோமீறர் சுற்று 2024 ஆம் ஆண்டில் 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து ரசிகர்களை ஈர்த்ததாகவும் 6 மில்லியன் உலகளாவிய தொலைக்காட்சி பார்வையாளர்களை சென்றடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
2016 ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்ட பாகு சிட்டி சர்க்யூட், எட்டு பதிப்புகளில் ஏழு வெவ்வேறு வெற்றியாளர்களைக் கொண்ட அதன் கணிக்க முடியாத பந்தயங்களுக்கு பெயர் பெற்றது. செர்ஜியோ பெரெஸ் மட்டுமே இரண்டு முறை வென்றுள்ளார், அதே நேரத்தில் லூயிஸ் ஹாமில்டன், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ,ஆஸ்கார் பியாஸ்ட்ரி ஆகியோர் மற்ற வெற்றியாளர்களில் அடங்குவர்.