Sunday, January 18, 2026 4:37 pm
இரத்தினபுரி-பாணந்துறை (A008) பிரதான சாலையில் இலிம்பா சந்திக்கு அருகில் ஜனவரி 16 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் இரண்டு மோட்டார் சைகிள்கள் ரேஸ் ஓடியபோது காருடன் மோதியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய மற்றொரு இளைஞர் தற்போது ஹொரண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பந்தய முறையில் அதிவேகமாக சென்றதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர் திசையில் இருந்து இலிம்பா நோக்கி திரும்பிய காருடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் முதலில் அம்புலன்ஸ் மூலம் ஹொரண மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு 17 வயதுடைய நபர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய காரை ஓட்டிய சாரதி ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 500,000 ரூபா சொந்த பிணையில்விடுவிக்கப்பட்டார்.
இறந்தவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு அவருக்கு உதவிய வர்கள்மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

