ஹொங்கொங்கை நோக்கி நகரும் ராகசா புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. , 2017 இல் ஹடோ , 2018 இல் மங்குட் புயல்கள் ஏற்படுத்திய சேதத்தை ராகசா புயலும் ஏற்படுத்தும் என ஹொங்கொங்கின் இரண்டாவது அதிகாரி எரிக் சான் திங்களன்று கூறினார்.
ரகாசா புயல் வடக்கு பிலிப்பைன்ஸைத் தாக்கியபோது, மரங்களை சாய்த்து, கட்டடங்களின் கூரைகளை கிழித்து எறிந்தது,நிலச்சரிவில் ஒருவர் மரணமானார். அங்கு ஆயிரக்கணக்கானோர்பாடசாலைகளிலும் வெளியேற்ற மையங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
இந்த சூப்பர் சூறாவளி மேற்கு நோக்கி நகர்ந்தபோது மிகவும் ஆபத்தான புயலாக இருந்தது, தென் சீனக் கடலில் சுழன்று கொண்டிருந்தபோது அதன் மையத்தில் மணிக்கு அதிகபட்சமாக 230 கிலோமீற்றர் (140 மைல்) வேகத்தில் காற்று வீசியது என்றுஹொங்கொங்கின் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
7.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரம் விரிவான இடையூறு மற்றும் சாத்தியமான சேதத்திற்கு தயாராகி வந்தது, அதே நேரத்தில் அருகிலுள்ள சீன தொழில்நுட்ப மையமான ஷென்சென் 400,000 மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.