Saturday, February 7, 2026 5:08 pm
வேலைநிறுத்தம் செய்பவர்கள் அல்லது தெருக்களில் இறங்குபவர்கள், 2027 ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்பின் மூன்றாவது தவணை வழங்கப்படும் வரை பொதுத்துறை ஊழியர்களுக்கு எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,
2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது கொடுப்பனவுகளுக்காகப் போராடுவது நியாயமானதல்ல 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வுக்காக அரசாங்கம் 330 பில்லிய ரூபாவை செலவிட வேண்டியிருக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டில் சம்பள உயர்வுக்காக 110 பில்லியன் ரூபாவும்,, 2026 ஆம் ஆண்டில் 220 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டது.
சம்பள அதிகரிப்பின் மூன்றாவது தவணையை வழங்கிய பிறகும், பட்ஜெட்டில் அதிகரிப்பின் தாக்கத்தை மதிப்பிட்ட பிறகும், வேறு ஏதேனும் கொடுப்பனவுகளை அரசாங்கம் பரிசீலிக்கும்.
“சில தொழிற்சங்கங்கள் கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தாலும், சில கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோருகின்றன. அது நடக்காது. சம்பள உயர்வின் மூன்றாவது தவணையை வழங்கிய பின்னரே, பட்ஜெட்டில் அதிகரிப்பின் தாக்கத்தை மதிப்பிட்ட பின்னரே வேறு எந்த கொடுப்பனவுகளையும் நாங்கள் பரிசீலிப்போம். 2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது கொடுப்பனவுகளுக்காகப் போராடுவது நியாயமில்லை,” என்றார்.

