Saturday, January 31, 2026 4:32 pm
சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 9 லட்சம் பேர் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 15 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 1.50 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்பதும், மீதமுள்ள 13.50 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றியும், முகவரி மாறியதாலும் நீக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளின் மூலம், ஆவண சரிபார்ப்பு , முகவரி மாற்றங்களுக்காக விண்ணப்பித்த சுமார் 7 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
சிறு பிழைகள் காரணமாக நீக்கப்பட்ட 2.11 லட்சம் பேரும் மீண்டும் சேர்க்கப்பட உள்ளனர். இதுவரை 2.11 லட்சம் புதிய வாக்காளர்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 6.50 லட்சம் பேரின் படிவங்களும் விரைவில் பதிவேற்றப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

