Tuesday, February 10, 2026 9:43 am
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ரி20 உலகக் கிண்ண குழு நிலைப் போட்டி பிப்ரவரி 15 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), பாகிஸ்தான் அரசு ஆகியன திங்களன்று உறுதிப்படுத்தின.
பங்களாதேஷ் விவகாரத்தினால் இந்தப் போட்டியைப் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், ஐசிசி ,நட்பு நாடுகளின் அழுத்தத்தால் தற்போது விளையாடச் சம்மதித்துள்ளது.
இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது என ஒரு வாரமாக கூஉறிவந்த நக்வி, லாகூரில் ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது பேச்சை லேசாக மாற்றினார். “நாங்கள் விருந்தினர்களை மதிப்பவர்கள். ஐசிசி அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டனர். விருந்தினர் என்று வந்துவிட்டால், பழைய கசப்பான சம்பவங்களை மறந்து மன்னித்துவிடுவோம்” என்று கூறினார். இதுவே பாகிஸ்தான் இறங்கி வருவதற்கான முதல் சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.
உலகக் கோப்பைத் கிண்ணத் தொடரில் இருந்து விலகிய பங்களாதேஷ் அணி மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது என்றும், 2031ஆம் ஆண்டிற்குள் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் உரிமை வங்கதேசத்திற்கு வழங்கப்படும் என்றும் ஐசிசி உறுதியளித்துள்ளது. அனேகமாக அந்த உரிமை 2028 அண்டர்-19 உலகக்கோப்பையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

