Tuesday, February 11, 2025 4:58 am
ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகக் கூறப்படும் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 பேரின் நிலைமையை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பாராளுமன்றத்தில் வினவிய போது அவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறியதாகவும் அந்தப் பதிலில் தனக்குத் திருப்தி இல்லை என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் தற்போது 554 இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும், 64 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அந்த புள்ளிவிவரங்களின் துல்லியம் குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது, அரசாங்கம் தலையிட்டு சரியான புள்ளிவிவரங்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த குடும்பங்களுக்கு சரியான தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

