2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அவர்களின் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது எனவும் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா? என்பது தொடர்பில் தகவலை வெளியிட சிறிதரன் எம்.பி கேள்வி எழுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Trending
- புதிய பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
- பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்சிச்சூடு மூவர் பலி
- காஸாவில் 24 மணி நேரத்தில் 123 பேர் மரணம்
- இலங்கையில் கஞ்சா பயிரிட சட்டபூர்வ அனுமதி
- மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
- ஹர்த்தால் போராட்டம் ஓகஸ்ட் 18ஆம் திகதி
- மனித ரோபோவினால் இயக்கப்படும் முதலாவது வர்த்தக நிலையம்
- ஊர்காவற்துறையில் நிலத்திற்கு கீழ் கஞ்சா மீட்பு