சீரில்லாத பொதுப் போக்குவரத்து முறையின்மையால் வருடாந்தம் 500 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது. வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த இழப்பு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பல வருட கட்டுப்பாடுகளின் பின்னர் அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி உள்ளது.புதிய கார்கள், முச்சக்கர வண்டிகள் ,ம் மோட்டார் சைக்கிள்களின் வருகையால் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் ஏற்படும் செலவுகள் மீண்டும் நாட்டிற்கு சுமையாக மாறும்.
இறக்குமதி செய்யப்படும் பஸ்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மக்கள் தொகையில் கால் பகுதியினர் பொது போக்குவரத்தை நம்பியுள்ளனர், பலர் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்”, என்றார்.
Trending
- ரக்பி பணிக்குழுவிலிருந்து இருவர் நீக்கம்
- அரசு மரியாதையுடன் மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு
- இளவரசர் வில்லியமின் வனவிலங்கு ஆவணத் தொடரில் இலங்கை
- பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி பொருத்த ஆலோசனை
- 16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா
- ரஷ்யாவில் இருந்து 390 உக்ரேனியர் நாடு திரும்பினர்
- மெலிந்த குழந்தையை காப்பாற்ற போராடும் தாய்
- ஜேர்மனியில் 18 பேரை கத்தியால் குத்திய பெண்