Thursday, January 22, 2026 7:20 am
மத்திய மலைநாட்டு இயற்கை காடுகளில் 34 சதவீதம் டிட்வா சூறாவளியால் சேதமடைந்துள்ளதாக
டிட்வா சூறாவளியால் சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு, அதன் ஆரம்ப அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபேதி தெரிவித்தார்.
டிட்வா சூறாவளியால் சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழு இரண்டு வாரங்களுக்குள் அதன் ஆரம்ப அறிக்கையை சமர்ப்பித்ததாகவும், ஆறு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அந்தக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முதற்கட்ட அறிக்கையின்படி, ஈரமான மண்டலத்தில் அத்தனகலு ஓயா, களனி கங்கை , களு கங்கை உள்ளிட்ட ஆற்றுப் படுகைகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும், வறண்ட மண்டலத்தில் மல்வத்து ஓயா, மகாவலி கங்கை, மீ ஓயா , கலா ஓயா ஆகியவற்றையும் உள்ளடக்கிய ஆற்றுப் படுகைகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளை பேரழிவு சேதப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
மினிபே, கொத்மலை, அரநாயக்க மற்றும் பதுளை , மாத்தளை மாவட்டங்களில் உள்ள மலைநாட்டு இயற்கை காடுகள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
பருத்தித்துறை, வலிகாமம் வடக்கு, கல்முனை, நிந்தவூர் ,கிண்ணியா ஆகிய கடலோரப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும், முத்து பந்தியா ,ஆராச்சிகட்டுவாவில் குளம் சூழலில் உள்ள சதுப்பு நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

