Monday, April 6, 2026 10:11 pm
போர் நிறுத்த கோரிக்கையை ஈரான் ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தங்கள் தரப்பில் 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் பாகிஸ்தான் மூலம் ஈரான் முன் வைத்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் , பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், போரை நிறுத்த பாகிஸ்தான், எகிப்து , துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
இந்த மத்தியஸ்தத்தை தொடர்ந்து தற்போது, ஈரான் தனது கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.
ஈரான் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் உயர் மட்ட அளவில் ஆய்வு செய்து, 10 அம்சங்கள் கொண்ட தனது பதில் திட்டத்தை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளது. ஈரான் வெறும் ‘தற்காலிக போர்நிறுத்தத்தை’ ஏற்க மறுத்துள்ளது. மாறாக, போர் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. போர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டால் மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், பிராந்தியத்தில் மோதல்களை முழுமையாக நிறுத்துதல், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான நிதியுதவி மற்றும் நடவடிக்கைகள், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான நிதியுதவி மற்றும் நடவடிக்கைகள் ஆகிவற்றை அமெரிக்கா உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஈரான் கேட்டுக்கொண்டிருக்கிறது.

