Saturday, January 17, 2026 8:04 pm
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி க்லந்துகொண்ட போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பஸ்கள் பொது மக்களை ஏற்றி இறாக்கியதால் யாழ்ப்பாண பஸ்நிலயத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசோகரிங்களுக்கு உள்ளாகினர்.
யாழ். மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பஸ் பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

