Friday, January 23, 2026 9:34 pm
2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் உட்கொண்டதற்காக 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் 135 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும், இதனால் 15 சாரதிகளும், 50 பாதசாரிகளும் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பாவித்த அனைத்து குற்றவாளிகள் மீதும் வழக்குத் தொடரப்படும் என்றும், சட்டத்தை சமமாக அமல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.

