இஸ்ரேலின் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி கடந்த வாரம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய ராணுவத் தளபதியாக இயல் ஜமீரை நியமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஆகியோர் கூட்டாக முடிவு செய்துள்ளதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதான ஜமீர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சின் தலைமை இயக்குநராக பணியாற்றினார். மார்ச் 6 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தனது புதிய பொறுப்பை ஏற்கிறார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளில் (IDF) 38 ஆண்டுகால பணியுடன், ஜமீர் துணைத் தலைவர், தெற்குக் கட்டளைத் தளபதி மற்றும் பிரதமரின் இராணுவச் செயலர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்துள்ளார்.
ஹலேவி, தனது இராஜினாமா கடிதத்தில், ஹமாஸ் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, ”இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்கும் பணியில் IDF தோல்வியுற்றது” என்று ஒப்புக்கொண்டார்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்