லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான கடமைத் தவறுதல் குறித்ததாகும்.
லசந்த கொலை வழக்கு தொடர்பான சமீபத்திய விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட மூன்று பேரை கல்கிசை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தமை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க சம்பந்தப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊட்சகவியலாளர்கள் நேற்று புதன்கிழமை [5] கேள்வி எழுப்பினர், அப்போது அவர் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட பரிந்துரையை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.அதன்படி, எதிர்காலத்தில் தொடர்புடைய முடிவு குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி உட்பட மூன்று பேரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தனது சட்டக் கருத்தை வழங்கியிருந்தார்.
ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது.
Trending
- ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!
- இலங்கை போக்குவரத்து சபை பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி