பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக நம்பப்படுகிறது. தகவல்களின்படி, அவர் தனது வீட்டில் மயக்கமடைந்து காணப்பட்டார்.தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது கல்பனா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் கண்கணிப்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்பனா இரண்டு நாட்களாக கதவைத் திறக்காததால், அவரது அண்டை வீட்டார் பொலிஸுக்கு அறிவித்தனர். பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் கல்பனா மயக்க நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி