Friday, January 16, 2026 9:18 pm
வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி வருவதற்காக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மரியா கொரினா மச்சோடாசெயல்பட்டு வந்தார். இவரை வெனிசுலாவின் இரும்பு பெண்மணி என அழைக்கிறார்கள்.
தன்க்குக் கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு நான் வழங்க ஆசைப்படுகிறேன் என மரியா கொரினா கூறினார். வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்தபோது தனது உண்மையான அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கினார். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரினா மச்சாடோ தனது நோபல் பரிசை டிரம்ப்க்கு வழங்கியதை, அமெரிக்கா-லத்தீன் அமெரிக்க சுதந்திர போராட்டங்களின் வரலாற்றுடன் ஒப்பிட்டு இந்த பரிசு வழங்கியதாக விளக்கினார். தான் மரியா கொரினா மச்சாடோ-விடம் இருந்து நோபல் பதக்கத்தை பெற்றதாக ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
நோர்வே நோபல் கமிட்டி தானாக முன்வந்து X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு முறை கமிட்டி முடிவு செய்து நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டுவிட்டால் அதை ரத்து செய்யவோ, பகிரவோ, மாற்றவோ முடியாது. விருது பெற்றவரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்று விளக்கியது. இதனால் பதக்கம் தற்போது ட்ரம்ப் கைக்கு மாறினாலும் பரிசுக்கு உரியவர் என்றென்றும் மரியா தான் என்பதும் நோர்வே நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியது.

