நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நேபாளத்தின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிட்டத்தட்ட நான்கு மணி நேர virtual சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
“அவரது ஒப்புதலுடன், இப்போது ராணுவத் தலைவருடன் ஈடுபட நாங்கள் முன்னேறலாம்” என்று virtual கூட்டத்தில் பங்கேற்ற Gen-Z உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சி இளைஞர்கள் தலைமைத்துவப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டனர்.பேச்சுவார்த்தைகளில் நடுநிலையைப் பேணுவதற்காக, தற்போது எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாத குடிமை ஆர்வலர் சுஷிலா கார்க்கி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தப் பொறுப்பிற்கு வேறு பெயர்களையும் குழு பரிசீலித்தது, ஆனால் இந்தப் பொறுப்பிற்கு மிகவும் திறமையான நபராகக் கருதப்படுவதால், சுஷிலா கார்க்கியை நியமிக்க முடிவு செய்தது.முன்னதாக, இராணுவத் தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மற்றும் துர்கா பிரசாயுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தார்.ஆனால் அந்தக் குழுவால் அது நிராகரிக்கப்பட்டது.
ஜூன் 7, 1952 அன்று பிரத்நகரில் பிறந்த சுஷிலா கார்க்கி, நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், இடைக்கால நீதி மற்றும் தேர்தல் தகராறுகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் பணியாற்றியுள்ளார்.
நேபாளத்தில் ஆண்களுக்கு மட்டுமே அதுநாள் தரப்பட்ட குழந்தைகளுக்கான குடியுரிமையை பெண்களுக்கும் வழங்க உரிமை உண்டு என தீர்பளித்ததிலும் அவர் குறிப்பிடத்தக்கவர்.