Monday, January 26, 2026 7:35 am
வெப்பநிலை திடீர் வீழ்ச்சியால் நுவரெலியாவில் பயிர்கள் சேதமடைந்ததாகக் கூறும் ஊடக அறிக்கைகளை கமத்தொழில் அமைச்சு மறுத்துள்ளது.
அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க இந்தக் குற்றாச் சாட்டுத் தொடர்பாகக் கருத்துக் கூறுகையில்,
, இன்றுவரை பயிர் சேதம் குறித்த எந்த அறிக்கையும் அமைச்சுக்குக் கிடைக்கவில்லை. “வானிலை ஆய்வுத் துறை குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், பயிர்களுக்கு எந்த சேதமும் ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்த கட்டத்தில் இழப்பீட்டுத் திட்டங்களைத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. ஏதேனும் சிக்கல்கள் பதிவாகினால், அவற்றை நாங்கள் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் குளிர் காலநிலை மற்றும் அதிகாலை உறைபனி காய்கறி , தேயிலை ஆலியவற்றின் விளைச்சல் பாதித்ததாகக் கூறும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

