மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இளைஞனை சித்திரவதை செய்த வழக்கில் குற்றம் சாட்டம் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பதில் பொலிஸ்மா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை (04) பணி நீக்கம் செய்துள்ளார்.
மாத்தறை, மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி ,கல்கிஸ்ஸை பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளையும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மாத்தறை மேல் நீதிமன்றம் ஜனவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
நிலையில் வழக்கு விசாரணை பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு