பீகாரில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீகார் சட்டசபையில் உள்ள 243 இடங்களுக்கான பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 22ம் திகதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் தேர்தல் கமிஷன் உள்ளது. அதே சமயம் சாத் திருவிழா அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ளதால் அதற்கு பிறகு தேர்தலை நடத்தும் படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதே போல் தேர்தல் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்தம் 7.42 கோடி பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்றும், இவர்களில் 14 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இருப்பினும் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு வெளியிடப்படும் என இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் நவம்பர் 6ம் திகதியும், 2ம் கட்டம் நவம்பர் 11ம் திகதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் 2025 அட்டவணை :
முதல் கட்ட தேர்தல் – நவம்பர் 6
2ம் கட்ட தேர்தல் – நவம்பர் 11
வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 10
மனுக்களை திரும்பப் பெற கடைசி திகதி ஒக்டோபர் 22
வாக்கு எண்ணிக்கை – நவம்பர் 14
Trending
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு