பழம் பெரும் நடிகையும் ஏ.வி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா [87] இன்று புதன்கிழமைகாலமானார்.
கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புஷ்பலதா கதாநாயகியாக அறிமுகமானார். சாரதா , பார் மகளே பார் , நானும் ஒரு பெண் , யாருக்கு சொந்தம் , தாயே உனக்காக , கற்பூரம் , ஜீவனாம்சம் , தரிசனம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவர், தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை என்ற படத்தில் ரஜினிக்கு மாமியார் ரோலில் வில்லியாக நடித்திருந்தார்.
நானும் ஒரு பெண் திரைப்படத்தில் புஷ்பலதா ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அவர்களில் ஒருவரான மகாலட்சுமி சில படங்களில் நடித்துள்ளார்.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”